லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் MAF பிராந்தியத் தலைவராக லயன்ஸ் கழகங்களின் புதிய ஆளுநர் சபைக்கு தெரிவு! 


சர்வதேச லயன்ஸ் கழகங்கங்களின்  இலங்கை 306 B1 மாவட்டத்தின்  2017/2018 ஆம் ஆண்டுக்கான காலப்பகுதில் புதிய ஆளுநர் லயன் ஹமிலஸ் பெர்ணான்டோவின் புதிய ஆளுநர் சபைக்கு பிராந்தியம் 9 இற்கான பிராந்தியத் தலைவராக  தெரிவு செய்யப்பட்டுளார். 

Posted on:
2017-06-22 02:31:16

லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் MAF பிராந்தியத் தலைவராக லயன்ஸ் கழகங்களின் புதிய ஆளுநர் சபைக்கு தெரிவு! 

2016/2017 ஆண்டின் நூற்றாண்டு ஆளுநர் லயன் டாக்டர் வை.தியாகராஜா அவர்களின் ஆளுநர் சபையில் வலயத் தலைவராக உயர்ந்த சேவை ஆற்றியமைக்காக லயன் சாமஸ்ரீ தேசகீர்த்தி ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் MAF அவர்கள் சர்வதேச லயன்ஸ் கழகங்கங்களின்  இலங்கை 306 B1 மாவட்டத்தின்  2017/2018 ஆம் ஆண்டுக்கான காலப்பகுதில் புதிய ஆளுநர் லயன் ஹமிலஸ் பெர்ணான்டோவின் புதிய ஆளுநர் சபைக்கு பிராந்தியம் 9 இற்கான பிராந்தியத் தலைவராக  தெரிவு செய்யப்பட்டுளார். 

லயன் றஜீவன் அவர்களின் உன்னத சமூக சேவைக்காக இந்தப் பதவி நிலை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முனனர் சங்கானை லயன்ஸ் கழகத்தின் தலைவராக செயற்பட்டு அதன் பின்னர் வலயத்தலைவராக பணியாற்றி தற்போது பிராந்தியத் தலைவராக உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லயன் றஜீவன் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் உப அதிபராக கடமையாற்றுவதுடன், வடக்கு இலங்கையில் புகழ்பெற்ற ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் ஸ்தாபகராகவும் அதன் புகழ்பூத்த ஆங்கில விரிவுரையாளராகவும் சமூக மறுவாழ்வுக்கான ஸ்தாபகத் தலைவராகவும் இருந்து வருகின்றார்.